கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 62 மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்த நிலையில் 62 மாணவிகளும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர் மேலும் இந்த ஆண்டும் அப்பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மாணவிகளின் பெற்றோர்கள் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்
இதேபோல அட்டகட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களும், ரொட்டிக்கடை, வாட்டர் பால்ஸ், காடம்பாறை ஆகிய அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளிகளிலும் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர் இந்நிலையில் பியூலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திரு இருதய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் திரு இருதய மேல்நிலைப் ஆகிய 3 தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ள நிலையில் மொத்தமுள்ள 8 பள்ளிகளில் 5 அரசு பள்ளிகளில் மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது