தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420
சீதக்காடு அருகே அமராவதி ஆற்று தடுப்பணையில் மூழ்கிய கல்லூரி மாணவன் சடலமாக மீட்பு. தீயணைப்புத் துறையினர் 24 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு.
திருப்பூர் பொல்லி காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் என்பவரது மகன் பிரேம்குமார் வயது 18 .இவர் தனியார் கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார்.
திருப்பூர் வீரபாண்டி பிரிவு பகுதியைச் சேர்ந்தவர் குமார் என்பவரது மகன் பிரதீப் 21, திருப்பூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த துறைபாண்டி என்பவரது மகன் பிரதீப் வயது 18, பொங்கலூர் உகாயனூர் பகுதியில் அற்புதராஜ் என்பவரின் மகன் ஜாய் வயது 19 .இவர் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இதேபோல் பல்லடம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் சரண் வயது 20, இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் திருப்பூரில் இருந்து காரில் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் சாலையில் சீதக்காடு அமராவதி ஆற்றில் குளிப்பதற்காக காரில் வந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அனைவரும் அமராவதி ஆறு சித்தக்காடு தடுப்பணை அருகே மது அருந்திவிட்டு ஆற்றில் குளிக்க சென்றதாகவும் குளித்துக் கொண்டிருந்த திடீரென பிரேம்குமார் ஆற்றுக்குள் மூழ்கி மாயமானார். இச்சம்பவத்தை அறிந்த சக நண்பர்கள் அமராவதி ஆற்றில் தேடியும் பிரேம்குமார் கிடைக்காததால் உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தாராபுரம் தீயணைப்புத்துறையினருக்கும் தாராபுரம் போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்தில் நீண்ட நேரமாக அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி மாயமான பிரேம்குமாரை தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு நேரம் ஆகிவிட்டதால் பிரேம்குமாரின் உடலை மீட்கும் பணி தாமதமானது. இதைத் தொடர்ந்து இன்று காலை வழக்கம் போல் தீயணைப்புத் துறையினர் அமராவதி ஆற்றில் உள்ள சீதக்காடு தடுப்பணையில் இறங்கி தேடினர்.
கடந்த 24 மணி நேரத்திற்கு பிறகு அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி மாயமான பிரேம்குமாரின் உடல் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட பிரேம்குமாரின் உடல் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனை பிரேத கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.