தூத்துக்குடி மாவட்டத்தின் 36 ஆவது காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா பதவியேற்றார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த டாக்டர் மதன் முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த அபிஷேக் குப்தா தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
இதனை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தின் 36 ஆவது காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா வெள்ளிக்கிழமை பதவி ஏற்று கொண்டார். முன்னதாக காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதன் பின்பு தூத்துக்குடி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா பதவியேற்றுக்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பதவியேற்ற அபிஷேக் குப்தாவுக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்