நாமக்கல் மாவட்டம் மோகனூரில் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் தலைமை கரும்பு அலுவலர் ராமு என்பவர் பணிபுரிந்து ஒய்வு பெற்ற நிலையில் மீண்டும் அவரை ஆலை நிர்வாகம் தற்காலிகமாக பணி அமர்த்தி உள்ளது. இந்த நிலையில் கரும்பு ஆலையில் புரியும் பணியாளர்களை அவ்வப்போது ராமு ஒருமையிலும், அபாசமாகவும் பேசுவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பணியாளர்கள் ஒருமையில் பேசும் ராமுவை அப்பணியில் இருந்து அகற்றி விட்டு வேறு நபரை நிரந்தரமாக பணி அமர்த்த வேண்டும் என கரும்பு ஆலையின் மேலாண்மை இயக்குநரிடம் மனு அளித்திருந்தனர்.
மனு அளித்து கடந்த 12 நாட்கள் ஆகியும் வேறுநபரை பணியில் சேர்க்காததால் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தற்காலிகமாக பணிபுரிந்து வரும் ஓய்வு பெற்ற தலைமை கரும்பு அலுவலர் ராமுவை பணியிலிருந்து நீக்ககோரி கரும்பு உற்பத்தி சங்கத்தினர் பணியை புறக்கணித்து மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.