நிதித்துறை அமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் இருவரும் ஒன்றிணைந்து சிங்காரவேலர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்ட மீன்வளத் துறை அமைச்சர்
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக அமைந்துள்ள சிங்காரவேலரின் சிலைக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் ஆகிய இருவரும் கூட்டாக இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினர் அவர்களிடம் காசிமேடு மீனவர்கள் பல கோரிக்கைகளை முன் வைத்தனர்
இதில் கருவாடு காய வைக்க இடத்தில் ஆய்வு செய்தார் பின்னர் அதிகாரியை அழைத்து இந்த இடத்தில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அந்த இடத்தை முக்கால்வாசி இடம் கிரிக்கெட் விளையாடுவதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் மாற்று இடத்தில் கருவாடு காய வைக்க இடம் ஒதுக்கி தருமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார் இதில் இளைஞர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்
தொடர்ந்து காசிமேடு மீன் துறைமுகத்தை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் அங்கு மேற்கூரை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவது குறித்து அதிகாரிகளை கேட்டு அறிந்து கொண்டனர்
அதேபோன்று திருவொற்றியூரில் உள்ள சூரை மீன் பிடி துறைமுகத்தை பார்வையிட்டு துறைமுகத்தின் வரைபடங்களை பார்வையிட்டு அதிகாரியிடம் கேட்டறிந்தார் இதில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் தவெக நிர்வாகிகள்
மற்றும் திருவள்ளுர் தென் கிழக்கு மாவட்ட இளைஞர் செயலாளர் ஏ ஆனந்து திருவள்ளுர் தென்கிழக்கு மாவட்ட பொருளாளர் எஸ் ஜே சீனிவாசன் திருவள்ளுர் தென் கிழக்கு மாவட்ட துணை பொது செயலாளர் பிரபு மற்றும் வி எம் மாரி மற்றும் தவெக கட்சி நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் உடன் இருந்தனர் அமைச்சரிடம் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்