தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மேக்கப் கலைஞர்கள் தங்கள் மாடல்களுடன் மேடையில் அணிவகுப்பு நடத்தி அசத்தல்

மேக்கப் மற்றும் ஃபேஷன் துறையில் புதிய திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் கோவையில் மேக் 2026 (MAC 2026) எனும் மேக்கப் ஆர்டிஸ்ட் போட்டி, ஆடை அலங்கார அணி வகுப்பு மற்றும் ஃபேஷன் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது…

கம்ஃபோர்ட் ஷூட்ஸ் சார்பாக அதன் நிறுவனர் அக்‌ஷயா தலைமையில் நடைபெற்ற இதில்,தமிழகம் மட்டுமின்றி கேரளா,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மேக்கப் துறை சார்ந்த கலைஞர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்..

இந்திய திருமணங்களின் பாரம்பரிய உடைகள் எனும் தலைப்பில் நடைபெற்ற இதில்,புடவை,லகங்கா,சோளி போன்ற உடைகளை அணிந்த மாடல் பெண்கள் மணக்கோலத்தில் மேடையில் ராம்ப் வாக் நடந்து அசத்தினர்..

நிகழ்ச்சியில் மாடல்கள், மேக்கப் ஆர்டிஸ்ட்கள், டிசைனர்கள் மற்றும் ஃபேஷன் பிராண்டுகள் கலந்து கொண்டு நவீன மற்றும் பாரம்பரிய ஆடைகளை அறிமுகப்படுத்தினர்.

இதில் சிறந்த சிகை அலங்காரம்,புதுமை,இயற்கை அலங்காரம் என பல்வேறு பிரிவுகளில் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகற் வழங்கப்பட்டன..

இதில் நடுவர்களாக பிரபல அழகியல் நிபுணர்கள் சத்யா,ஷைனி பார்பரா,அகிலாஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த மேக்கப் கலைஞர்களை தேர்வு செய்தனர்..

போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரம் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட ஆபரணங்கள் பரிசாக வழங்கப்படுவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அக்‌ஷயா தெரிவித்தார்..

மேக்கப் மற்றும் ஃபேஷன் துறையில் புதிய திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி, இளைஞர்கள் மற்றும் ஃபேஷன் துறையினரின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடதக்கது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *