50 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் பூங்கா மேயர் ஜெகன் ஆணையர் பிரியங்கா திடீர் ஆய்வு.


தூத்துக்குடி மாநகராட்சி கட்டுப்பாட்டில் சங்கரநாராயணன் பூங்காடுவி புரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவை அண்ணா நகர் பகுதி பொதுமக்கள் .டுவிபுரம் பகுதி பொதுமக்கள் தினசரி இந்த பூங்காவை பயன்படுத்தி வந்தனர் இதனை அடுத்து மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு பூங்காவை பயன்படுத்தும் பொதுமக்கள் மழைக்காலத்தில் மழை நீர் முற்றிலும் பூங்காவில் தேங்கி இருப்பதால் நடைபயிற்சி மேற்கொள்ள முடியவில்லை பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மேயர் ஜெகனுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதன் அடிப்படையில் மாநகராட்சி மேயர் ஜெகன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு சுமார் 55 லட்ச ரூபாய் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் சங்கரநாராயணன் பூங்கா புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவை இன்று காலை மேயர் ஜெகன் ஆணையர் பிரியங்கா மற்றும் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நடை பயிற்சி மேற்கொண்ட பொதுமக்களிடம் உங்களுக்கு இப்போது இந்த பூங்காவில் வசதிகள் எப்படி உள்ளது எல்லா வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என்று மேயர் ஜெகன் கேட்டறிந்தார்

அப்போது பொதுமக்கள் தற்போது நல்ல முறையில் பூங்கா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது வரும் காலங்களில் மழைக்காலத்தில் மழை நீர் தேங்காது என்று பொதுமக்கள் தெரிவித்தனர். பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள். விளையாடுவதற்கான மைதானங்கள் உள்ளிட்டவைகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளது நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான வசதி ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது

அப்போது அங்கு இருந்த சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி படிக்கும் மாணவர்கள் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறையில் கதவு சரிவர மூட முடியவில்லை என்று குறையை தெரிவித்தனர் உடனடியாக மேயர் ஜெகன் ஒரு மணி நேரத்தில் கதவை சரி செய்ய வேண்டும் சரி செய்து அதற்கான தகவலை தெரிவிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதுபோல பூங்காவின் உள்ளேயே இரண்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டி உள்ளது

அதில் ஒரு பகுதியில் குடிநீர் வாழ்வு இருக்கும் இடத்தில் நீர் தேங்கி இருந்தது உடனடியாக அதனை சரி செய்ய வேண்டும் வரும் காலத்தின் நீர் எதுவும் இங்கு தேங்கி இருக்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் மேயர் ஜெகன் கூறினார் மேலும் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் இதுபோல நீர் தேங்கி இருந்தால் பொதுமக்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும் என்று மே. ஜெகன் கூறினார் அதற்கு அதிகாரிகள் உடனடியாக சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தனர் மேலும் இரவு நேரத்தில் மின் விளக்குகள் முழு அளவில் எரிய வேண்டும் அதனை வந்து இரவில் பார்க்க வேண்டும் என்றும் மேயர் ஜெகன் அதிகாரியிடம் கூறினார்.

அப்போது அங்கு சிலம்பு பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது சிறுவர் சிறுமியனர் சிலம்பு கற்றுக் கொண்டிருந்தனர். பயிற்சியாளர் இடம் மேயர் ஜெகன் சிலம்பு பூங்காவின் வெளிப்பகுதியில் ஹாலோ பிளாக் கல் பதிக்கப்பட்டு உங்களுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்படும் ஆகையால் பூங்காவின் வெளிப்பகுதியில் சிலம்பு பயிற்சி நடத்த வேண்டும் அப்போதுதான் பூங்காவிற்குள் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது விளையாடுவதற்கும் வசதியாக இருக்கும் என்று மேயர் ஜெகன் கூறினார். உடனடியாக அங்கு இருந்த அதிகாரிகளிடம் பூங்காவிற்கு வெளியே ஹாலோ பிளாக் கல் பதிக்கும் பணியை உடனடியாக விரைவாக பணியை முடிக்க வேண்டும் என்று மேயர் ஜெகன் கூறினார்.

பொதுமக்களின் 20 வருடக் கோரிக்கையை ஏற்று சுமார் 55 லட்சம் மதிப்பில் அது நவீன வசதிகளுடன் கூடிய சங்கரநாராயணன் பூங்கா புதுப்பிக்கப்பட்டுள்ளது இந்த பூங்காவில் நடைபெற்று மேற்கொள்வதற்கான வசதி விளையாட்டு உபகரணங்கள் பல்வேறு விளையாட்டு விளையாடுவதற்கான மைதானமும் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அங்கு இருந்த போது மக்கள் மேயர் ஜெகனுக்கும் ஆணையர் பிரியங்கா விற்கும் நன்றி தெரிவித்தனர். இரண்டு மாத காலமாக தேர்தல் என்பதால் மௌனம் காத்த மேயர் ஜெகன் தற்போது இரண்டு நாட்களாக அதிரடியாக களத்தில் இறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *