தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொய்யப்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் தர்மபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம்,மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து 21-05-2026 அன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது,

இதனை அரூர் அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார் தொடங்கி வைத்தார்,இதனை அடுத்து இன்று 23-05-2026 125 கண் அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்த நபர்களை கோயம்புத்தூர் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அரூர் பேருந்து நிலையத்தில் பேருந்தில் அனுப்பி வைத்தார் அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார்,மேலும் இதில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் ஏ ஆர் எஸ் எஸ் . சக்தி,ஓய்வு பெற்ற கண் மருத்துவர் கலையரசன் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *