திருவாரூர் செய்தியாளர் V, செந்தில் குமார்


திருவாரூர் மாவட்டத்தில் அதிரடி: தனிப்படையினரால் ரூ. 20,000 ரொக்கம், 3 கார்கள் மற்றும் 765 கிலோ குட்கா பறிமுதல்; 6 நபர்கள் கைது!


திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதப் புகையிலைப் பொருட்கள் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தனிப்படை சார்பு ஆய்வாளர் திரு. கார்த்திக் மற்றும் போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இன்று (23.05.2026) தனிப்படையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனைகளில், இரண்டு வெவ்வேறு காவல் நிலைய எல்லைகளில் மொத்தம் 765 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 6 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  1. திருவாரூர் தாலுகா காவல் நிலைய எல்லை: 365 கிலோ குட்கா பறிமுதல்
    காலை 06:00 மணியளவில், காட்டூர் அருகே தனிப்படையினர் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக குட்கா கடத்திய அதிராமபட்டினத்தைச் சேர்ந்த அஷ்ரப் அலி (60) மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரகுமார் (24), மங்கனாராம் (20) ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர்.

  2. பறிமுதல் செய்யப்பட்டவை: 365 கிலோ குட்கா, ரூ. 20,000 ரொக்கம், ஒரு ஆல்ட்ரோஸ் கார் மற்றும் ஒரு டஸ்டர் கார்.
  3. வலங்கைமான் காவல் நிலைய எல்லை: 400 கிலோ குட்கா பறிமுதல்
    மதியம் 13:00 மணியளவில், கும்பகோணம் – தஞ்சாவூர் பைபாஸ் சாலை, மதகரம் பகுதியில் தனிப்படையினர் நடத்திய சோதனையில், காரில் குட்கா கடத்தி வந்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பரத் எல்பா பரதன் (34), கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் (26) மற்றும் மன்னார்குடியைச் சேர்ந்த எக்பர்ட் (48) ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர்.
    பறிமுதல் செய்யப்பட்டவை: 400 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மாருதி சுசூகி ஸ்விஃப்ட் கார்.

  4. கைது செய்யப்பட்ட 6 நபர்களும், பறிமுதல் செய்யப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும் வாகனங்களுடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டு, அடுத்தகட்ட தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *