கம்பம் சட்டமன்ற உறுப்பினரிடம் வாணியர் சங்க தலைவர் மனு
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து தென்னிந்திய வாணியர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் சி. காந்தி செட்டியார் தேனி மாவட்ட வாணியர் சங்கத் தலைவர் ஆர் சுந்தரவடிவேல் ஆகியோர் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள ஒரு கண்ணகி கோவிலுக்கு செல்லும் பாதை சீரமைக்க வேண்டும் ஆர் கே சண்முகம் செட்டியார் திருவுருவச் சிலை அமைக்க வேண்டும் சிங்கன் செட்டியார் மணிமண்டபம் அமைக்க வேண்டும் நமது சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவில் கூறப்பட்டிருந்தது மனுவை பெற்றுக் கொண்ட எம் எல் ஏ மனுவில் உள்ள கோரிக்கைகள் குறித்து சட்டமன்றத்தில் பேசி நடவடிக்கை எடுக்க பாடுபடுவேன் என்று உறுதியளித்தார் உடன் வாணியர் சங்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்