கோவிலாண்டனூரில் 4 நாட்களாக எரியாத தெரு விளக்குகள்

தென்காசி மாவட்டம்,கடையநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட கோவிலாண்டனூர் பகுதியில் கடந்த 4 நாட்களாக தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர், சிறுமியர்கள் இரவு நேரங்களில் தெருக்களில் நடந்து செல்ல அச்சத்துடன் உள்ளனர்.

இது குறித்து பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இரவு நேரங்களில் தெருக்கள் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளதால் திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் அபாயம் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பழுதடைந்த தெரு விளக்குகளை சரிசெய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

— ரமேஷ்,
ரிப்போர்ட்டர்,
டைம்ஸ் ஆப் தமிழ்நாடு.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *