திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விடுமுறை நாளான மே 23 ஞாயிற்றுக்கிழமையையொட்டி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் போலீசார் மற்றும் கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு பணியில் ஈடுபட்டனர். மேலும், கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தண்ணீர் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இன்று கொஞ்சம் மேகமூட்டமாக வெயில் குறைவாக இருந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.


திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *