திருவாரூர் செய்தியாளர் V, செந்தில் குமார்

திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவாரூர் வடக்கு மாவட்டம் அகரதிருநல்லூர் ஊராட்சியில் உள்ள மாற்றுகட்சியினர் தமிழக வெற்றி கழகத்தில் இணையும் விழா திருவாருர் மாவட்டசெயலாளர் மதன் தலைமையில் கொடராச்சேரி வடக்கு ஒன்றியசெயலாளர் ஆரோக்கியராஜ் முன்னிலையில் நடைபெற்றது ,

இதில் அகரத்திருநல்லூர் அதிமுக ஊராட்சி கழக செயலாளர் வரதராஜன் , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வனிதாவரதராஜன் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வேல்முருகன் , திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஈதல் வினோத் மற்றும் ஏராளமான பெண்கள் குடும்பம் குடும்பமாக 300 க்கும் மேற்பட்டோர் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர் ,

தொடர்ந்து தவெக திருவாரூர் மாவட்டசெயலாளர் பேசியதாவது –
தமிழக வெற்றிகழக தலைவர் அமைத்த உடன் திருவாரூர் காட்டூர் , அகரத்திருநல்லூர் பகுதியில் இருந்து பல்வேறு மாற்றுக் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிகழகத்தில் இணையும் முதல் விழா ஆகும் , தொடர்ந்து ஏராளமானோர் பல்வேறு பகுதியிலிருந்து இணைய உள்ளனர் ,
மாற்றுக் கட்சியிலிருந்து வந்திருந்தாலும் இதைக் கட்சியாக பார்க்காமல் குடும்பமாக பாருங்கள் ,
நமக்கு நல்லதுசெய்ய தளபதி வந்துள்ளார் ,
அனைவருக்கும் எதிர்காலம் இருக்கிறது , நம்பி வந்திருக்கிறீர்கள் ,
தமிழகமக்கள் அனைவரும் நல்ல நிலைமைக்கு வரப் போகிறோம் ,
மாற்றம் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் நல்லதே நடக்கும் என பேசினார் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *