நன்னிலம்., மே. 24
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே குடவாசல் பகுதியில் உட்பட்ட ஏரூர்ந்தவாடி கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அலமேலுமங்கா சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி மடாலய 107 ஆம் ஆண்டு கம்ப சேவை நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.

இங்கு வெளியூர் பக்தர்கள் பஜனை உடன் நிகழ்ச்சி துவங்கியது. அதனை தொடர்ந்து மறுநாள் உள்ளூர் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது . இதில் முக்கிய நிகழ்வாக ஸ்ரீ வெங்கடாஜலபதிக்கு கம்பம் நிறுத்தி சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகமும் ஆராதனைகள் நடைபெற்றது.

இங்கு நடைபெற்ற கம்ப சேவை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பின்னர் நரிக்குறவர்களுக்கு புத்தாடை அணிவிக்கப்பட்டு முதல் மரியாதை செய்யப்பட்டது. தொடந்து நரிக்குறவர்கள் பங்கேற்ற அன்னதானம் வழங்கப்பட்டது.

நிறைவாக கோணங்கி ஆட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை ராமன் மற்றும் விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கம்ப சேவை நிகழ்ச்சியில் ஆயிரம் கணக்கான மக்களுக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *