கோயம்புத்தூர், மே 24: ‘பல்சமய நல்லுறவு இயக்கத்தின்’ (All Religious Affinity Movement) மாநில இணைச் செயலாளராக கே. சாதிக் பாஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இயக்கத்தின் தலைவர் ஹாஜி. ஜெ. முகமது ரஃபி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 05-04-2026 அன்று பல்சமய நல்லுறவு இயக்கத்தின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இயக்கத்தின் பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில், புதிய நிர்வாகிகளின் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், இயக்கத்தின் நல்லிணக்க செயல்பாடுகளை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்காகப் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக, இயக்கத்தின் மாநில இணைச் செயலாளராக கே. சாதிக் பாஷா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அவருக்கு அனைத்து தரப்பினரும் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்கி, சமூகத்தில் நல்லிணக்கத்தை வளர்க்க உதவிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.