கம்பம் நாக மணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
தேனி மாவட்டம்
கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வில் தேர்வு எழுதிய 148 பேரில் 148 பேரும் தேர்ச்சி பெற்று 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர் இதன் படி பள்ளி அளவில் மூன்று இடங்களையும் பிடித்த மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
2025- 2026ம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு அரசுபொதுத்தேர்வில் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அஸ்வினி 500 க்கு 494 மதிப்பெண்களும், யஸ்வந்த் -487 மதிப்பெண்களும், யாக்ஷா 486 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்தனர், மேலும் 13 பேர் 500 க்கு 480 மதிப்பெண் களுக்கு மேல் பெற்றுள்ளனர். 29 பேர் 500 க்கு 470க்கு மேல் மதிப்பெண் பெற்றனர். 50 பேர் 500க்கு 450க்கு மேல் மதிப்பெண் பெற்றனர்.
89 பேர் 500 க்கு 400 மதிப்பெண்கள் மேல் பெற்று வரலாற்று சாதனை படைத்தனர். இதேபோல் பாடவாரிய 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற 11 மாணவ,மாணவிகளுக்கும் பள்ளி தாளாளர் காந்தவாசன் , இணைச்செயலாளர் சுகன்யா காந்தவாசன் ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினார். உடன் பள்ளி முதல்வர் புவனேஸ்வரி, துணை முதல்வர்கள் லோகநாதன், சரவணன், யோகா பயிற்சியாளர்கள் ராஜேந்திரன் ,ரவிராம், மற்றும் பள்ளி இருபால் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்