தாம்பரம் மாநகராட்சி மண்டலம் இரண்டு 27 வது வார்டு பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 10 நாட்களாக அப்பகுதியில் குடிநீர் வராதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் இதனை பலமுறை 27 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மகேஸ்வரி கார்த்திக் மற்றும் மண்டல தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் குடிநீர் விநியோகம் செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலி குடத்துடன் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையான ஜிஎஸ்டி சாலையில் குரோம்பேட்டை போத்தீஸ் எதிரே திடீர் சாலை மறியல் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஜி எஸ் டி சாலையை வாகனங்கள் கடந்து செல்லாமல் தடுத்து காலி குடத்துடன் பெண்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *