தூத்துக்குடி வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரண்டு பிரிவின் கீழ் இரண்டு தூக்கு தண்டனைகள் வழங்கி தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி வீட்டிலிருந்து அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக்கு சென்ற நிலையில் காணாமல் போனார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் இந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றவாளியை கைது செய்ய கோரி பொதுமக்கள் ஒரு வார காலமாக போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தூத்துக்குடி ராஜபாண்டி நகர் பகுதியை சேர்ந்த தர்ம முனிஸ்வரன் என்பவரை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி தர்ம முனீஸ்வரன் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். தர்ம முனிஸ்வரன் மீது தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டது
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கு கடந்த 5ம் தேதி விசாரணைக்கு வந்தது விசாரணைக்காக தர்ம முனீஸ்வரனை காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் தொடர்ந்து 3 முறை நேரில் தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கு குறித்து 73 சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணை அனைத்தும் கடந்த 21 ஆம் தேதி புதன்கிழமை நிறைவடைந்தது.
இதைத்தொடர்ந்து, இவ்வழக்கில் இன்று 25ம் தேதி திங்கட்கிழமை தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தீர்ப்பை வழங்கினார்
தீர்ப்பை வழங்கும் முன்பு குற்றவாளி தர்ம முனீஸ்வரர் இடம் அவரது குடும்பம் குறித்தும் அவர் தற்போது யாருடன் வசித்து வருகிறார் என்பது குறித்தும் கேட்டறிந்தார் மேலும் அவரது வருமானம் குறித்தும் கேட்டிருந்தார் மேலும் உடலில் வேறு ஏதும் நோய் உள்ளதா எனவும் கேட்டார்
நீபதியின் கேள்விக்கு குற்றவாளி தர்ம முனிஸ்வரன் தற்போது தனது தாயுடன் வசித்து வருவதாகவும் தினமும் 600 ரூபாய் ஊதியம் வருவதாகவும் கூறினார் மேலும் தனக்கு உடலில் எந்த நோயும் இல்லை என தெரிவித்தார்
இதைத்தொடர்ந்து தீர்ப்பை தெரிவித்த நீதிபதி பிரித்தார் தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என உங்கள் தரப்பு கூறினார்கள் அரசு தரப்பில் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கூறினார்கள் இதை பார்க்கும் பொழுது உங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்குவதற்கான எந்த சாத்தியமும் இல்லை நீங்கள் ஏற்கனவே இதே போன்று ஒரு ஒரு பெண்ணை கொலை செய்து அந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது வெளியே வந்துள்ளீர்கள்
ஆனால் திருந்தாமல் மேல் மேலும் இதுபோன்று பாலியல் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளீர்கள் உங்களுக்கும் இந்த வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது அதையும் நினைக்காமல் இந்த குழந்தையை கொடூரமாக மருத்துவ பரிசோதனை அறிக்கையில் மிகவும் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது இதன் காரணமாக உங்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படுகிறது
மேலும் இந்த வழக்கு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது எனவே குறைந்தபட்ச தண்டனை உங்களுக்கு வழங்க சட்டத்தில் இடம் இல்லாததால்
பி என் எஸ் சட்டம் 124 ஒரு தூக்கு தண்டனையும்மற்றும் போக்சோ சட்டப்பிரிவு 6 இன் கீழ் ஒரு தூக்க தண்டனையும் என இரண்டு தூக்கு தண்டனைகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்
சம்பவம் நடந்து 77 நாளில் குற்றவாளிக்கு இரண்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது
தொடர்ந்து காவல்துறையினர் குற்றவாளி தர்ம முனீஸ்வரனை பாதுகாப்புடன் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்