தூத்துக்குடி தமிழக வெற்றிக்கழக அமைச்சர்கள் தங்களது துறை குறித்து உணர்ந்து பேச வேண்டும் பாலியல் சம்பவங்கள் குறைய கடும் மரண தண்டனை உள்ளிட்ட தண்டனை வழங்க வேண்டும் டாஸ்மாக் கடையை முழுமையாக மூடினால் நன்றாக இருக்கும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியும் நடிகர் சரத்குமார் பேட்டி

தூத்துக்குடி விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியும் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்

பாலியல் சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கிறது குற்ற சம்பவங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் பாலியல் வன்கொடுமையில் இதுபோன்று நடக்கும் போது கடுமையான தண்டனை மரண தண்டனை விதிக்க வேண்டும் என ஒவ்வொரு தடவையும் கேட்டு இருக்கிறோம். அது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான் தண்டனைகள் உறுதி செய்யப்பட்டு தூக்கு தண்டனை கொடுத்தால் தான் இந்த மாதிரி செயல்கள் ஈடுபட இடம் கொடுக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருந்தபோது அவர் வந்த போது 500 கடைகளை மூடினார் எடப்பாடி பழனிச்சாமி 500 கடையை மூடினார் நெடு ஞ்சாலையில் இருக்கக்கூடிய கடைகளை மூடுகிறேன் என மூடினார்கள் ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் 500 கடைகள் மூடினார்கள் இவர் வந்தவுடன் 700 கடைகள் மூடி இருக்கிறார்கள் இவர் வந்தவுடன் தான் வந்ததாக கருத்துக்களை பரப்புகிறார்கள் தமிழக முழுவதும் டாஸ்மாக் கடைகள் இருக்காது என சொன்னால் நல்ல முடிவாக நினைக்கிறேன்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று என பல நாடுகளில் பேசியிருக்கிறார்கள் கப்பல் போக்குவரத்து குறைக்கப்பட்டு அது நடக்காத சூழ்நிலையில் கச்சா எண்ணெய் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது ரொம்ப நாளா கட்டுப்படுத்தி வைக்கப்பட்ட விலையை இப்போது தவிர்க்க முடியாத காரணத்தால் ஏறுகிறது பல நாடுகளும் கலந்து பேசி என்ன பண்ணலாம் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள் சமநிலையை கொண்டு வருவதற்கு போர் நிறுத்தம் நடந்தால் மட்டுமே ஆறு ஏழு மாதங்களில் கொண்டுவர முடியும் இது இயல்பான சம்பவம் தான் என நினைக்கிறேன் சரத்குமார் கூறினார்

கூட்டணி ஆட்சி நீடிக்காது என்பது நான் ஜோசியர் கிடையாது என கூறினார்

திமுக வெற்றி பெற்ற உடனே 6 மாத காலம் பார்ப்போம் இந்த நிர்வாகத்தை பற்றி தெரிந்து கொண்ட பிறகு குற்றச்சாட்டு அதைப்பற்றி பேசுவோம் என பெருந்தலைவர் காமராஜர் கூறினார்கள் ஸ்டாலின் அவர்களும் சொல்லியிருக்கிறார்கள் அவர்கள் பேசும்போது சுற்றுச்சூழல் அமைச்சர் சுற்றுலாத்துறை என பேசும்போது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது துறை சார்ந்த அதை எல்லாம் அமர்ந்து பேசி அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கலாம் என்பது என்னுடைய கருத்து எந்த துறையில் இருக்கிறீர்கள்? அந்த துறையில் என்ன இருக்கிறது? அதில் என்ன அதிகாரம் இருக்கிறது என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்த பிறகு பேச வேண்டும் என்பதுதான் எனது கருத்து

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *