கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள அம்பாள் ஆட்டோ மாருதி சுசூகி ஷோரூமில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், விக்டோரிஸ் கார்கள் மீது சிறப்பு விலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விற்பனை பொது மேலாளர் ராஜேஷ் ஜெயராமன் பேசியபோது, மே மாத இறுதி வரை நடைபெறும் இந்த சிறப்பு சலுகை திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாய் வரை பயன் பெறும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.மேலும், ஜூன் மாதம் முதல் கார் விலைகள் உயர வாய்ப்பு இருப்பதால், தற்போது வழங்கப்படும் இந்த தள்ளுபடி திட்டம் வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய இலாபமாக அமையும் என கூறிய அவர்,இந்த சலுகை அனைத்து அம்பாள் ஆட்டோ ஷோரூம்களில் இருப்பதாக கூறினார்..
குறிப்பாக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு உள்ள விக்டோரிஸ் கார்கள் மீது வழங்கப்படும் இந்த சலுகையை பொதுமக்கள் உடனடியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.இதனுடன், மாருதி சுசூகியின் பிற மாடல் கார்கள் மீதும் பல்வேறு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய கார் வாங்க திட்டமிட்டு இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த மே மாத சலுகைகள் சிறந்த வாய்ப்பாக இருக்கும் என அம்பாள் ஆட்டோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.