எண்ணூர் வ.உ.சி நகரில் கஞ்சா விற்பனை செய்வதாக வந்த புகாரின் பேரில் எண்ணூர் தனிப்படை போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர் . அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைனை யடுத்து அந்த வீட்டில் வசித்த பிரபல கஞ்சா வியாபாரியும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான (கைப்புள்ள) தினேஷ் 35 என்பவரை கைது அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அவரிடம் போலீசார் விசாரணை செய்ததில் திருவள்ளூர் புதுப் பேட்டையைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலமுருகன் 39 என்பவர் தனக்கு கஞ்சாவை லாரி மூலம் மொத்தமாக வாங்கி வந்து கொடுப்பார் என்று அவர் வீட்டில் வைத்து பாக்கெட்டுகளாக மடித்து இந்தப் பகுதியில் சில்லறையில் விற்பனை செய்வர் என விசாரணையில் கூறிய நிலையில்

இதை அடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட பாலமுருகனை போனில், தினேஷின் கூட்டாளி போல் நடித்து அவரை தொடர்பு கொண்டு, தங்களுக்கு ஒடிசாவில் இருந்து 5 கிலோ கஞ்சா வாங்கி கொண்டு வர பேசி கேட்ட பணத்தை அனுப்பி உள்ளனர் லாரி ஓட்டுநர் பாலமுருகன் ஒடிசாவில் இருந்து 5 கிலோ கஞ்சாவை லாரியில் கொண்டு வந்து, எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் போலீசாரிடம் கொடுக்க முயன்ற பாலமுருகனை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்த அவனிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் பாலமுருகன் திருவாரூர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் சென்னையில் AYT டிரான்ஸ்போர்ட்டில் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருவதாகவும் லாரி மூலம் கஞ்சாவை கடத்தி வந்து போலீசாரிடம் வசமாக சிக்கிய சம்பவம் அரங்கேறியது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *