மேட்டுப்பட்டி. கங்கா பரமேஸ்வரி நகர் ஆகிய பகுதிகளில் மேயர் ஜெகன் திடீர் ஆய்வு .


தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் முதலில் மேட்டுப்பட்டி பகுதியில் சென்று குடிநீர் பிரச்சனை எதனால் தாமதம் ஆகிறது என்ன பிரச்சனை என்று ஆய்வு மேற்கொண்டு அதனை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு சரி செய்யப்பட்டு வருகிறது.

அதுபோல கங்கா பரமேஸ்வரி நகரில் குடிநீர் பிரச்சனை இருந்து வருவதாக தொடர்ந்து பொதுமக்கள் மேயர் ஜெகனுக்கு கூறி வந்தனர் அதன் அடிப்படையில் இன்று காலை மாநகராட்சி மேயர் ஜெகன் அதிகாரிகள்டன் சென்று அப்பகுதி பொதுமக்களிடம் நேரில் விபரங்களை கேட்டு அறிந்தார் அதன் அடிப்படையில் உடனடியாக அங்கும் குடிநீர் பிரச்சனை தீர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இது பற்றி மாநகராட்சி மேயர் ஜெகன் கூறுகையில் தற்போது கோடை காலம் அதனால் மாநகர் பகுதிக்கு வரும் குடிநீர் அளவு சிறிதளவு குறைந்துள்ளது தொடர்ந்து மாநகர மக்களுக்கு எந்த விதமான தங்கு தடை இன்றி குடிநீர் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாநகராட்சி நிர்வாகம் அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

எந்த விதமான தடையின்றி பொதுமக்களுக்கு கோடை காலத்திலும் குடிநீர் தொடர்ந்து வழங்கப்படும் பொதுமக்கள் குடிநீரை வீணாக்காமல் தேவையான அளவு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *