வேதாரண்யம் கோடியக்கரை பகுதியிலிருந்து பைபர் படகில் மீன் பிடிக்க சென்ற நான்கு மீனவர்கள் படகு கவிழ்ந்த நிலையில் அவர்கள் கடலில் தத்தளித்து வந்தனர் அதில் மூன்று பேரை மீட்டு வேதாரண்யம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களை வேதாரண்யம் திமுக நகர கழக செயலாளர் மா.மீ. புகழேந்தி அவர்கள் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார் மற்றும் மருத்துவரை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டு அறிந்தார்