மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 2 நாள் பயிலரங்கம்


கல்பாக்கம் மே 27
மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த் துறை மற்றும் கலைடாஸ்கோப் தமிழர் இன வரைவியல் கழகம் சார்பில் தமிழ்ச் சமூகத்தை விளங்கிக் கொள்ளுதல் என்ற தலைப்பில் 2 நாள் பயிலரங்கம் அமெரிக்கன் கல்லூரி பிங்காம் டென் அரங்கில் நடைபெற்றது 20 மற்றும் 21 ஆம் தேதி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ் உயராய்வு மைய தலைவர் டாக்டர் செங்கோல் மேரி வரவேற்புரை நிகழ்த்தினார்.

கல்லூரி முதல்வரும் செயலாளருமான டாக்டர் ஜெ பால் ஜெயகர் வாழ்த்துரை வழங்கினார் தமிழர் இனவரைவியல் கழக இணைச் செயலாளர் டாக்டர் ந இரத்தினக்குமார் நோக்கவுரையாற்றினார். பயிலரங்கில் வெகுசனக் கொந்தளிப்பின் அரசியல் என்ற தலைப்பில் தருமராஜ் பிம்பங்களான தமிழ் உடல்கள் என்ற தலைப்பில் கோவிந்தராஜன் பக்தி இலக்கியமும் தமிழ் அடையாள அரசியலும் என்ற தலைப்பில் ஆனந்தகுமார் புனைவுகளும் உண்மைகளும் நவீன இலக்கியம் பேசும் தமிழ்ச் சமூக வாழ்க்கை என்ற தலைப்பில் டாக்டர் இரத்தினக்குமார் ஊடகங்கள் வழி வெகுசன வியம் குறித்து பிரபாகர் ஆகியோர் உரையாற்றினர்.

இரண்டாம் நாள் நிகழ்வில் தமிழ் மெய்யியலில் பொருள் கோளியல் குறித்து முரளி சிரமண மரபுகள் வழி தமிழ்ச் சமூகத்தை வாசித்தல் தலைப்பில் ஸ்டாலின் இராஜாங்கம் தொடர்ந்து வரும் தொல்காப்பியம் தலைப்பில் பெரியசாமி இராஜா தமிழ்ச் சமூகத்தின் தொடக்கமும் தொடர்ச்சியும் தலைப்பில் பக்தவச்சல பாரதி ஆகியோர் உரையாற்றினர்

இந்த நிகழ்ச்சியில் 140 க்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் தமிழ்ப் பற்றாளர்கள் கலந்து கொண்டனர் ராஜா காயத்ரி ஆகியோர் தொகுத்து வழங்க துறை தலைவர் ஹென்றி ஜீலியஸ் நன்றி கூறினார். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *