இந்து இளைஞர் முன்னணி சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு
இந்து இளைஞர் முன்னணி அமைப்பில் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
S.அஜித்குமார் தலைமையில் மாவட்டத்தில் அரசினர் தொடக்க நடுநிலை மற்றும் உயர்நிலைப் ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 1212-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகள் மிகவும் அசுத்தமாகவும் சுகாதாரமற்றும் இருக்கின்றது.
இதனால் மாணவ மாணவிகளுக்கு உடல் ரீதியாக பல்வேறு நோய்கள் தொற்று ஏற்படும் சூழ்நிலை உள்ளது.பல தொடக்கப் பள்ளிகளில் இன்னும் கழிவறைகள் இல்லாத நிலையில் உள்ளது. பல அரசு பள்ளிக்கூடங்களில் உள்ள கட்டிடங்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளது .
தமிழகத்தில் கடந்த வருடம் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மற்றும் திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை பகுதிகளில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து மாணவர்கள் உயரிழந்ததை கவனத்தில் கொண்டு பள்ளி கட்டிடங்கள் தரமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நமது மாவட்டத்தில் பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கணிப்பொறி மற்றும் வேதியியல் மற்றும் இயற்பியல் பாடத்திற்கான ஆய்வு உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள் பற்றாக்குறை என அறிகிறோம் இதை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் விதமாக பள்ளி கல்லூரிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். மேலும் நமது மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரசு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாணவர்களிடையே நடத்த வேண்டும் மனு அளித்துள்ளார்.
இதில்
இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், கோவை கோட்ட பொதுச் செயலாளர் கிருஷ்ணன், இந்து இளைஞர் முன்னணி நிர்வாகிகள் சூர்யா, பிரசாந்த் ,மதன் ,சுபாஷ் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்