இன்று உலக பட்டினி தினத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் தவெக தொண்டர்கள் சார்பில் ஏழை, எளிய, ஆதரவற்றும் முதியோர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என தவெக தலைவர் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தவெக தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவன் தலைமையில் தருமபுரி தெற்கு ஒன்றிய தவெக சார்பில் ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன் தருமபுரியில் உள்ள மனவளர்ச்சி குன்றிய சிறுவர் இல்லம் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ளவர்களுக்கு காலை உணவு இட்லி, பொங்கல், கேசரி, வாழைப்பழம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வித்யாஒன்றிய நிர்வாகிகள் நாகராஜ், இலக்கியம்பட்டி வெங்கடேஷ்,அருள் பூவரசன், , பரமசிவம்,குனா, சுந்தரவேல், பிரகாசம் ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.