திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலைய நுழைவாயில் முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக உலக பட்டினி தினத்தை முன்னிட்டு முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உணவு வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.

தொடர்ந்து நகரின் முக்கிய இடங்களான தேரடி திடல்,திரு ஆவணங்குடி அருகே
தண்டபாணி நிலையம் அருகே உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தொடர்ந்து திருக்கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் முதியோர்களுக்கும் இலவசமாக உணவு வழங்கினர்.

தொடர்ந்து உலக பட்டினி தினத்தில் பொதுமக்கள் அனைவரும் உணவில்லாமல் இருக்க கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனி பாலன் ஆகியோர் தலைமையில் உணவு வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.

தொடர்ந்து இந்நிகழ்வில் நகர செயலாளர் மிதுன் மாவட்ட இணை செயலாளர்
விஜய்சிவா மாவட்டத் துணை செயலாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலையில் உணவு வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றன.

தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கட்சி நிர்வாகிகள் பல குழுக்களாக பிரிந்து நகரின் முக்கிய இடங்களில் பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கி உலக பட்டினி தினத்தை சிறப்பித்தனர்.

மேலும் உணவில்லாமல் தவித்து வரும் பொது மக்களுக்கு உணவு வழங்கிய தவெக நிர்வாகிகளுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *