தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் உலக பட்டினி தினம் முன்னிட்டு உணவு வழங்கல்.

திருப்பூர் மாவட்டம், குண்டடம் பகுதியில் இன்று (மே 28) உலக பட்டினி தினத்தை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி குண்டடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், ஜோதியம்பட்டி, கொழுமங்குழி, இடையன் கிணறு, காட்டுப்புதூர், தேர்பாதை மற்றும் சேர்காரம்பாளையம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் நடைபெற்றது. குறிப்பாக வயதான மற்றும் உதவி தேவைப்படும் பொதுமக்களுக்கு உணவு பொட்டணங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ருத்ராவதி பேரூர் கழகம், குண்டடம் கிழக்கு மற்றும் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் முத்து வடுகநாதன், பேரூர் கழகச் செயலாளர் தாமரைச்செல்வன், கிழக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், வர்த்தக அணி செயலாளர் நந்தகுமார், பேரூர் கழக விவசாய அணி செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உணவு வழங்கினர்.

மேலும், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்த உணவு வழங்கல் நிகழ்ச்சி, உலக பட்டினி தினத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் அமைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *