அலங்காநல்லூர். மே.29

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ முத்தாலம்மன் ஸ்ரீ கோட்டைகருப்பசாமி உட்பட ஒன்பது தெய்வங்களின் உற்சவ விழா நிகழ்ச்சி நடைபெற்றது முன்னதாக ஒன்பது தெய்வங்களுக்கும் கனி மாற்றுதல் நிகழ்ச்சியும் இடையபட்டி கிராமத்திற்கு சென்று கணக்கு பிள்ளை அழைத்து வருதல்தொடர்ந்து பூசாரி வீட்டுக்குச் சென்றுமுத்தாலம்மன் அய்யனார் கருப்பசாமி மற்றும் குதிரை சாமி பெட்டி அழைத்து வந்து சுவாமி கண் திறந்து சக்தி கிடாய் வெட்டி கோவிலுக்கு செல்லுதல் நிகழ்வும் நேர்த்திக்கடன் செலுத்து நிகழ்வாக மாவிளக்கு மற்றும் முளைப்பாரிஎடுத்தல் பெட்டிபூசாரி அரண்மனை பொங்கல் வைத்து
கிடா வெட்டுதல்கிராம ஒன்பது தெய்வங்களின் கோவிலிலும்பொங்கல் வைத்து சக்தி கிடாய் வெட்டுதல்அதனைத் தொடர்ந்து நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்வாக கிராம பொதுமக்கள் பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதலும் தீச்சட்டி எடுத்தல் அழகு குத்துதலும் நடைபெற்றது.தொடர்ந்து அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியும் அய்யனார்,கன்னிமார், கருப்பசாமி,மற்றும் குதிரைகளும் கோவிலுக்கு சென்றடைந்தன.


கிராம பொதுமக்கள் சார்பாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.பல்லயம் பிரித்தலுடன் திருவிழா நிறைவு பெற்றது.இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை அ.கோவில்பட்டி மரியாதைக்காரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *