கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூர் மாவட்டத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நான்காம் ஆண்டு அன்னதான விழா
மாநில தலைவர் சகாயராஜ்,மாநில பொதுச் செயலாளர் பிரதீப் குமார், மாநில பொருளாளர் ராம்ஜி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி மேற்கு மண்டல செயலாளர் ஏ.வி.எம் சரவணன் ஆலோசனைப்படி வருடம் தோறும் உலக பட்டினத்தை முன்னிட்டு அன்னதான விழா
மாவட்டத் தலைவர் வேலுச்சாமி தலைமையிலும்,மாவட்ட செயலாளர் சிவப்பிரகாசம் முன்னிலையிலும் நடைபெற்றது.

உலக பட்டினி தினம் மே மாதம் 28 அன்று கடைபிடிக்கப்படுகிறது.பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நிலையான உணவுப் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்தவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்த தினத்தின் முக்கிய குறிக்கோள்கள் உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் நீண்டகாலப் பட்டினியால் எதிர்கொள்ளும் சவால்களை வெளிச்சம் போட்டுக் காட்டுதல்,நீடித்த தீர்வுகள்,உணவுப் பற்றாக்குறைக்கான மூல காரணங்களை (வறுமை, காலநிலை மாற்றம், மோதல்கள்) கண்டறிந்து, நிலையான தீர்வுகளை முன்வைத்தல்.அரசு சாரா நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் உணவு விநியோகம் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை ஒருங்கிணைக்கப்பட்ட வருகின்றனர்.


அதனைத் தொடர்ந்து நான்காம் தூண என அழைக்கப்படும் பத்திரிகையாளர்களும் ஒவ்வொரு ஆண்டும் கரூர் மாவட்டத்தில் உலக பட்டினி தினத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.இவ்விழாவிற்க்கு மூத்த பத்திரிகையாளர்கள் சிவராமன்,சொக்கலிங்கம்,மாநில செயற்குழு உறுப்பினர் கணபதி,கோபிநாதன், செல்வகுமார்,மாவட்ட அமைப்பாளர் வினோத்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சக்திவேல், மாவட்ட செய்தி தொடர்பாளர் ராஜசேகர், மேற்கு மண்டல செயற்குழு உறுப்பினர் ராஜலிங்கம் ,, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சுரேஷ்குமார் தனபால், கிருஷ்ணன் ,மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *