மன்னார்குடி., மே.28

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு பாட்டில் வியாபாரிகள் சங்க முன்னாள் மாநில தலைவர் ஆர்.வி ஆனந்த் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது கடந்த சில நாட்களாக டாஸ்மாக் ஊழியர்கள் ஒரு சில மாவட்டங்களில் கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கடையடைப்பு போராட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை அமைச்சர் விக்னேஸ் கோரிக்கை விடும் பொழுது பழைய காலி பாட்டில்களை கையாளுவதில் உள்ள நடைமுறைகளை முற்றிலுமாக மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அது நடைமுறைக்கு சாத்தியமில்லாத செயல் என்பது தமிழ்நாடு பாட்டில் வியாபாரிகள் சங்கத்தின் உடைய கோரிக்கையாக உள்ளது. ஏனெனில் விவசாய நிலங்கள் வனப்பகுதிகள் வன விலங்குகள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பரதன் சக்கரவர்த்தி மற்றும் சீனிவாசன் அடங்கிய பெஞ்ச் மூலம் இந்த காலி பாட்டில் திரும்ப பெற வேண்டும்.

இந்த திட்டம் கோயமுத்தூர் போன்ற மாவட்டங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகவும் திருவாரூர் நாகை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகவும் 31 மாவட்டங்களில் கடந்த 8 மாத காலமாகவும் எந்த விதமான எதிர்ப்பும் இல்லாமல் இந்த பணியானது தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றது.

இன்றைய போராட்டம் ஆனது டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுக்கான போராட்டம் இது திசை திருப்பும் வகையில் ஏதோ காலி பாட்டில் எடுப்பதற்காக இந்த போராட்டம் நடப்பதாக சித்தரிப்பது ஒரு தவறான செயலாகும். காலி பாட்டில் மூலம் மாதம் ஒன்றுக்கு ரூ 30 கோடிக்கு மேலாக தமிழக அரசுக்கு வருமானம் வருகிறது இன்னும் தமிழக அரசு செய்யக்கூடிய திட்டங்களை எல்லாம் சரியாக செய்தால் கிட்டத்தட்ட வருடத்திற்கு ரூ 600 கோடி அளவிற்கு இந்த காலிபாட்டில் மூலம் வருமானம் ஈட்டக்கூடிய செயல் கண்டிப்பாக நடைபெறும்.

அவர்கள் ஊழியர்கள் கேட்டது முழுக்க முழுக்க டாஸ்மாக் இந்த பணியை செய்ய மாட்டேன் என்பது போல ஊடகங்களும் செய்திகளும் மற்ற அரசு துறைகளும் தவறான ஒரு செய்தியை பரப்புகிறது. கடந்த 8 மாத காலமாக 31 மாவட்டங்களில் எடுக்கும் போது எவ்வித பிரச்சனையும் இல்லை.

கடந்த மூன்று வருட காலமாக கோயம்புத்தூர் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் எடுக்கும் போது எந்தவிதமான பிரச்சனையும் இல்லை.ஆனால்! அது போன்ற பகுதிகளில் இப்பொழுது தற்காலிகமாக ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனைக்கு காரணம் ஊழியர்களுக்கு தேவையான ஊதியம் இல்லை.

அதாவது காலம் வரை ஊதியத்திற்கு அவர்களை மாற்றவில்லை தொகுப்பூதியமாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். 10 மணி நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு 500 ரூபாய்க்கு குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது என்பதே இதற்கான காரணமாகும்.

அது மட்டுமல்லாமல் கட்டிட வாடகை மின்சார கட்டணம் ஏற்று இருக்கு கூலி பிரேக்கஜ்சார்ஜ் இப்படியாக பல்வேறு வகையில் பணியாளர்கள் பாதிக்கப்படும் பொழுது டாஸ்மார்க் பணியாளர்கள் மட்டும் ஏதோ ஊழல் செய்வது போல அவர்களை சித்தரித்து வீடியோ வெளியிடுவதும் அவர்களை ஊழல்வாதி போல் செய்வதும் மிக மிக தவறான செயலாகும்.

இந்த நடவடிக்கை போக்க வேண்டுமானால் டாஸ்மாக் ஊழியர்கள் அதேபோல ஒரு நாளைக்கு ஒரு கோடி பாட்டிலை எடுத்து சொல்லு மறுசுழற்சி செய்கின்ற பாட்டில் வியாபாரிகள். அதுபோல இந்த பாட்டிலை பெறக்கூடிய டிஸ்லரி உரிமையாளர்கள் அரசு அதிகாரிகள் போன்ற நான்கு முனை உள்ள அனைவரையும் ஒன்றிணைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் தன்னிச்சையாக.

அரசு அதிகாரிகளை கொண்ட இந்த முடிவை எடுக்கக்கூடாது. இது முக்கியமாக வருடத்திற்கு 30 முதல் 600 கோடி ரூபாய் வருமானம் கொடுக்கக்கூடிய எங்களுடைய தமிழ்நாடு பாட்டில் வியாபாரிகள் சங்கம் கிட்டத்தட்ட 500 நிறுவனங்களை வைத்துள்ளோம் நேரடியாக 25000 பணியாளர்களுக்கு மறைமுகமாக கிட்டத்தட்ட 10 லட்சம் பணியாளர்கள் இதில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எனவே எங்களையும் ஒரு பிரதிநிதியாக அழைத்து எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதில் எங்களையும் ஒரு பிரதிநிதியாக அழைத்து ஆலோசிக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

அதுமட்டுமல்லாமல் இந்த நடைமுறையின் மூலம் விவசாய நிலங்கள் மட்டுமல்லாமல் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட்டு இன்று பெரிய அளவில் எந்த இடத்திலும் பாட்டில் தேங்காத அளவில் இருக்கும் கடைகள் வெளிப்புறத்தில் பொது இடங்களில் , பூங்காக்களில் பாட்டில்கள் தேங்காமல் ஒரு சிறந்த நடைமுறையாக உள்ளதை மாற்ற வேண்டாம் என்பதை எங்களுடைய தமிழ்நாடு பாட்டில் வியாபாரம் கேட்டுக்கொள்கிறேன்.

வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக 500 ரூபாய் கூட கிடைக்கிறது. இல்ல நல்லா பார்த்தீங்கன்னா மதியம் சாப்பாடு இரவு சாப்பாடு இரண்டு சாப்பாடு இந்த ஊழியர்கள் வீட்ல சாப்பிடுவதில்லை இதில் அதிகப்படியான இறப்புகள் ஏற்பட்டிருக்கும் அது டாஸ்மாக் பணியாளர்கள் உடைய இறப்பாக மட்டும் தான் இருக்கும் அதனால எல்லாரும் பாக்குற கோணத்தை வந்து நம்ம பார்க்கக்கூடாது.

4600 டாஸ்மாக் கடையில் 25000 பணியாளர்கள் இருக்காங்க இந்த வருமானத்தை பிரித்து கொடுத்தால் இரண்டு மடங்கு சம்பளம் கொடுக்கலாம் இன்னைக்கு கொடுக்கிற சம்பளத்தை இரண்டு மடங்காக கொடுப்பதற்கு இந்த பாட்டிலாள் முடியும்.

நீதிபதிகள் சொல்லும் பொழுது இந்த பாட்டில் பைபாக் சிஸ்டத்துல வாங்க தான் சொன்னாங்க இந்த வருமானத்தை அதாவது நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தும் சொன்னாங்க அந்த நல்ல காரியங்கிறது தமிழ்நாடு பட்ஜெட் முக்கிய பங்கு வைக்கிற டாஸ்மாக் துறையில் உள்ள ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கை.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *