கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கோவை வீல் சேர் டி 20 கிரிக்கெட் போட்டி
தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்கம் மற்றும் கோவை கலைமகள் கல்லூரி இணைந்து நடத்தும் இதற்கான லீக் ஜெர்சி அறிமுகம் மாற்றுத்திறனாளிகளின் திறன்களை ஊக்குவிக்கும் விதமாக கோவையில் தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்கம் மற்றும் கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லூரியின் விளையாட்டு துறை இணைந்து கோவை வீல்சேர் டி20 கிரிக்கெட் லீக் போட்டி, கலை மகள் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது..
தமிழ்நாடு மற்றும் கோவா அணிகள் பங்கேற்க உள்ள இதற்கான ஜெர்சி அறிமுக விழா,காளப்பட்டி பகுதியில் நடைபெற்றது இதில், அத்வைத் லக்ஷ்மி குழுமத்தின் பொது மேலாளர் கிருஷ்ணகுமார்,சி.எஸ்.ஆர்.தலைவர் அனு கிருத்திகா, ராக் அமைப்பின் துணைத் தலைவர் ரவீந்திரன் மற்றும் KG H2Hஇறுவனத்தின் பொதுமேலாளர் அஜய் ஆறுமுகம் ஆகியோர் வெளியிட்டு பேசினர்…
தமிழ்நாடு அணிக்கான ஜெர்சிகளை அத்வைத் லக்ஷ்மி குழுமமும், கோவா அணிக்கான ஜெர்சிகளை KG H2H நிறுவனமும் வழங்கி ஆதரவு தெரிவித்தன தொடர்ந்து லீக் போட்டிகளில் கரந்து கொண்டு விளையாட உள்ள இரு அணி வீர்ர்களுக்கும் ஜெர்சி வழங்கப்பட்டது..
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டை ஊக்குவித்து, அனைவரையும் உள்ளடக்கிய விளையாட்டு கலாச்சாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தப் போட்டி நடத்தப்படுவதாகவும்,
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற போட்டிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்
பொதுமக்கள், விளையாட்டு ஆர்வலர்கள், மாணவர்கள் அனைவரும் இந்தப் போட்டியைக் கண்டு வீரர்களை உற்சாகப்படுத்துமாறு தமிழ்நாடு வீல்சேர் கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடதக்கது.