புவனகிரி மே 30
கடலூர் மாவட்டம் புவனகிரியில் கம்பி கட்டும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது
புவனகிரியில் உள்ள ஓம் சக்தி டிரேடர்ஸ் மற்றும் சென்னையைச் சேர்ந்த விக்கி இன்டஸ்ட்ரியல் பிரைவேட் லிமிடெட் இணைந்து பிரபல ஐ ஸ்டீல் கட்டுமான கம்பி நிறுவனம் குறித்தான கலந்துரையாடல் நிகழ்ச்சி மூகாம்பிகை திருமண மண்டபத்தில் ஓம் சக்தி டிரேடர்ஸ் உரிமையாளர்கள் சுந்தரேசன் மற்றும் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது
இதில் புவனகிரியைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் திரளாக பங்கேற்றனர் இந்த நிகழ்வில் கம்பி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் கம்பிகள் குறித்து அதன் பயன்பாடுகள் பயன்படுத்தும் விதம் அதன் தரம் மற்றும் உற்பத்தி குறித்தான கலந்தாய்வு கட்டிட தொழிலாளர்களுடன் நடைபெற்றது தொடர்ந்து கட்டிட தொழிலாளர்களுக்கு விக்கி நிறுவனம் சார்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் விக்கி நிறுவனம் சந்தோஷ் மேலாளர் சந்தோஷ் முருகன் விற்பனை அதிகாரி அழகு வேலன் மதன் தொழில்நுட்ப மேலாளர் பிரகாஷ் சேல்ஸ் சப்போர்ட் ஆகியோர் பங்கேற்று கலந்தாய்வு நடத்தினர்