தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் எழுந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு வீம நாயகி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா அதி சிறப்பாக நடைபெற்று வருவது வழக்கம். அதனைப் போலவே இந்த ஆண்டும் காப்பு அணியும் விழா. குதிரை எடுப்பு விழா . மற்றும் தேரோட்ட விழா என 12 நாட்கள் சிறப்பான முறையில் திருவிழா நடைபெற்று வருகிறது.

இதில் தினந்தோறும் இரவு நேரங்களில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி . மற்றும் பட்டிமன்ற நிகழ்ச்சி என நடைபெற்றது. இந்நிலையில் ஒன்பதாம் திருவிழா அன்று தேரோட்ட விழா அதிசிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் பக்த கோடிகள் என ஏராளமானோர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து வந்து அம்மனின் அருள் பெற்று சென்றனர்.

இந்த 12 நாள் திருவிழா ஏற்பாடுகளை ஆதனூர். கருப்பமனை. கூப்பளிக்காடு கிராமத்தினர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *