வாசுதேவநல்லூர், ஜூன் 1:
செண்பகவல்லி அணையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் தலைமையில் வரும் ஜூன் 5-ம் தேதி வாசுதேவநல்லூரில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பொதுமக்கள் மற்றும் கட்சியினரை திரளாக பங்கேற்க அழைப்பு விடுத்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு.இராசேந்திரன் கலந்து கொண்டு போராட்டத்தின் அவசியத்தை விளக்கி பேசினார். அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் தி. சதன் திருமலைக்குமார், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் சுதா.இ. பாலசுப்ரமணியன், மாவட்ட பொருளாளர் அலாவுதீன்,மாவட்டதுணைசெயலாளர் பொன்ஆனந்த்ராஜ் வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், வாசுதேவநல்லூர் நகர பொறுப்பாளர் மாரியப்பன், புளியங்குடி நகர செயலாளர் ஷாகிர் உசேன், திருவேங்கடம் வடக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன், ராயகிரி பேரூராட்சி செயலாளர் சங்கையா, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் மாரிசாமி, தென்காசி பாராளுமன்ற தொகுதி இணையதள ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் சங்கரன், மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் பாலகுமார், ஆசிரியர் வைரவன் சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன், புளியங்குடி ராமலிங்கம், சங்கர், மணி, சேகர், சுமங்கலி மாரியப்பன், சங்கரநாராயணன், கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நிர்வாகிகள், பல ஆண்டுகளாக மக்கள் எதிர்பார்த்து வரும் செண்பகவல்லி அணை சீரமைப்பு பணிகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அணையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
மேலும், ஜூன் 5-ம் தேதி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.