காரமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், காரமடை ரோட்டரி கிளப் சார்பில், வாரந்தோறும் மருத்துவ சிகிச்சைக்காக வரும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து மிகுந்த உணவு வழங்கப்படுகிறது. அதன் படி நேற்று 250வது வாரமாக உணவு மற்றும் ஊட்டசத்து பெட்டகம் சுமார் 60 பேருக்கு வழங்கப்பட்டது.


தலைமை மருத்துவர் சுகாதகர், வரவேற்றனர். தலைவர் குமணன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் தீபக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாவட்ட ஆளுநர்கள் பூபதி, சிவபாலன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். உணவினை மாவட்ட ரோட்டரி சுற்று சூழல் பிரிவு தலைவர் ஞானசேகரன் வழங்கினார். மேலும், துணை ஆளுநர் விஜய் பிரபு, மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவசதீஸ்குமார், காரமடை ரோட்டரி உறுப்பினர்கள் சேகர், காமராஜ், காரமடை லயன்ஸ் கிளப் தலைவர் செல்வராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *