C K RAJAN
Cuddalore District Reporter
9488471235
.
கடலூர் அரசுத்துறை அலுவலர்களுக்கான AI பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அரசுத்துறை அலுவலர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் கோப்புகளை கையாளும் முறை சார்ந்த பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தாவது,
அரசு அலுவர்கள் அரசின் சார்பில் வழங்கப்படும் சேவைகள் மற்றும் திட்டங்களை எளிதல் பொதுமக்களுக்கு சென்றடைந்திட புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிய முறையில் கோப்புகளை கையாள்வது குறித்து இரண்டு நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
AI தொழில்நுட்பம் பள்ளிக்கல்வித்துறை, வேளாண்துறை, வருவாய்த்துறை,கூட்டுறவு துறை உள்ளிட்ட அனைத்து துறைகளில் பணிகளை விரைந்து எளிதாக முடித்திடவும், சொல்ல வேண்டிய தகவல்களை எளிமையான முறையில் எடுத்துக்கூறவும் பயனுள்ளதாக இருக்கும்.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உயர் அலுவலர்களுக்கு துறையின் மூலம் அனுப்பப்பட வேண்டிய நேர்முக கடிதங்கள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து திட்ட அறிக்கைகள் மற்றும் கோப்புகள் தயார் செய்யும் முறைகள், அரசு அலுவலங்கங்களில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கோப்புகளில் இருந்து பெறவேண்டிய தகவல்களை எளிமையாக கண்டறிந்து பணிகளை விரைவாக மேற்கொள்ளலாம்.
இரண்டு நாட்கள் நடைபெறும் AI தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி வகுப்பினை அனைத்து துறை அலுவலர்களும் நல்ல முறையில் கற்று உங்களது பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூலம் அரசு அலுவலங்களில் பணிகளை விரைவாக மேற்கொண்டு, பொதுமக்களுக்கான சேவைகளை விரைந்தும் உடனடியாகவும் வழங்கிட இயலும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணியகோட்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது திரு.செல்வன், எச்.சி.எல் நிறுவன அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.