தமிழக முதலமைச்சர் விஜய் பிரச்சார மூடில் இருக்கிறார் அவர் அரசாங்க மூடுக்கு வர வேண்டும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை விமர்சனம்
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் 65 ஆவது பிறந்தநாளை ஒட்டிசென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடை அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் ஆதிபுரீஸ்வரர் பட்டினத்தார் தட்சிணாமூர்த்தி என ஒவ்வொரு கோவிலாகச் சென்று சாமி தரிசனம் செய்த தமிழிசை சௌந்தரராஜன்பின்னர் கோவில் வாசலில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது பேசிய அவர்இன்று தெலுங்கானா உதயமான நாள் எனதுபிறந்த நாளும் தெலுங்கானா உதயமான நாளும் ஒரே நாள் வருவதனால் காலையிலிருந்து தெலுங்கானா மக்கள் தொலைபேசியில் வாழ்த்து சொன்னார்கள்தெலுங்கானா உதயமான தினத்திற்கு தெலுங்கானா மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்
தமிழ்நாட்டில் நேற்றைய தினம் முதலமைச்சர் திருச்சி சென்றிருந்தார் இன்னும் தேர்தல் பிரச்சார மூடில் இருந்து வெளியில் வரவில்லை முதலமைச்சர் ஆவதற்கு மக்கள் வாய்ப்புகளை கொடுத்து இருக்கிறார்கள் உடனே போர்க்கால அடிப்படையில் பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் புதிய கல்விக் கொள்கை பி எம் ஸ்ரீ இந்த திட்டங்கள் மாணவர்களை உலக அளவில் உயர்த்துகின்ற திட்டங்கள் இந்த திட்டத்தை அரசியல் நோக்கத்தோடு பார்க்காமல் மத்திய அரசு நல்ல திட்டங்களை வரவேற்க வேண்டும் கடந்த ஆட்சியில் அரசியல் காரணங்களுக்காக எட்டரை லட்சம் பேருக்கு தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய உதவி மறுக்கப்பட்டு விட்டது
அதனால் தவெக அரசு மத்திய அரசின் என்னென்ன திட்டங்கள் தமிழக மக்களுக்கு பலன் தருகிறதோ அவற்றையெல்லாம் கொண்டு வர வேண்டும் தமிழ்நாட்டில் இந்த புதிய அரசு டேக் ஆப் ஆக வேண்டும்பிளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கிறேன் என்று சொல்வதால் பிளாக் ஆயிடக் கூடாது ஒயிட்டா இருந்தா பரவாயில்லைபெட்ரோல் டீசல் விலை உலக பட்டியலில் இந்தியாவில் குறைவாக இருக்கிறது
இன்னும் போர் சூழல் மறைந்த பின்பு நிச்சயமாக குறைக்கப்படும் டெல்லிக்கு சென்ற அண்ணாமலை கட்சி மாற போகிறாரா என்ற கேள்விக்கு மௌனம் சாதித்து கலைந்த சென்றார்சிங்க பெண் திட்டத்திற்காக முதலமைச்சர் தலைமையில் ஆரம்ப விழா இருந்தது அதுவும் ரத்து செய்யப்பட்டது ஏனென்று தெரியவில்லை
20 நாள் என்பது குறைந்த நாள் கிடையாது 20 நாட்களுக்குள் அனைத்து அரசாங்க நிர்வாகத்தையும் சரி செய்ய முடியும்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கால் சுட்டெரிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் தரையில் போடப்படும் கார்பெட் கூட வெயிலினால் சுடுகிறது பக்தர்கள் கோவிலுக்கு நடந்து சென்று வழிபடும் வகையில் அனைத்து கோவில்களிலும் ஏற்பாட்டை உடனே செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்