திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
பேக்கரிக்குள் புகுந்த அரசு பேருந்து. பள்ளி துவங்கிய முதல் நாளில் பதை பதைத்த சம்பவத்தின் CCTV
திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி துவங்கிய முதல் நாளிலேயே ஓட்டுனரின் விதிமுறையை கடைபிடிக்காத வாகன இயக்கத்தால் அரசு பேருந்தில் பயணித்த பயணிகளும் பள்ளி குழந்தைகளும் மரண பயத்தை காட்டிய சம்பவம் இந்த விபத்தில் ஏற்பட்டது தற்போது சிசிடிவி காட்சிகள் வாயிலாக தெரிய வருகிறது.
கோவையிலிருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இப்பகுதியில் காளி வேலம்பட்டி பிரிவு என்ற இடத்தில் போலீசார் டிவைடர் வைத்து விபத்தை தடுப்பதற்கான வேக தடுப்பை அமைத்துள்ளனர் இந்நிலையில் திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்தும் இதே பகுதியை சேர்ந்த ஆதர் சென்ற தனியார் பள்ளியின் பள்ளி குழந்தைகள் பயணிக்கும் வாகனமும் ஒரே திசையில் பள்ளி வாகனம் ஒன்வேயிலும் வந்து இடது புறமாக அரசு பேருந்து வருவதை பொருட்படுத்திக் கொள்ளாமல் சாலையை கடக்க முயற்சிக்கிறது
இந்நிலையில் அரசு பேருந்து ஓட்டுனர் பள்ளி குழந்தைகள் உயிரையும் பார்த்துக் கொண்டு பயணிகளின் நிலையையும் கருதி டிவைடரில் வேகத்தை முற்றிலும் கட்டுப்படுத்தாமல் இயக்கியதும் காரணமாக இருந்தாலும் சாமர்த்தியமாக இடது புறம் திரும்பக் கூடிய காளிவேலம் பட்டி சாலைக்குள் திருப்ப முயற்சித்துள்ளார் அப்போது கட்டுப்பாட்டை இழந்து சக்தி பேக்கரி என்ற பேக்கரிக்குள் பேருந்து புகுந்தது இந்நிலையில் பேக்கரியில் டீ அருந்திக் கொண்டிருந்தவர்களும் பேப்பர் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் பேருந்து வருவதை கண்டு உயிர் பயத்தை பார்த்து பதறி ஓடிய காட்சிகளும் தற்போது பதவிக்க வைக்கிறது இது தொடர்பாக பேக்கரியில் கட்டிட சேதாரங்கள் ஆன நிலையில் போலீசார் தற்போது விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் சம்பந்தப்பட்ட காவல்துறை உரிய வழக்கு பதிவு செய்து பள்ளி வாகனம் இதுபோன்று அன்றாடம் நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை இப்பகுதியினர் வைக்கின்றனர்.