தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் சிஎஸ்ஐ சிறுமியர் விடுதி சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதி முதியோர் இல்லங்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்தநாளில் மதிய உணவு முன்னாள் அமைச்சர்களால் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதைத் தொடர்ந்து சிஎஸ்ஐ சிறுமியர் விடுதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதி முதியோ இல்லங்களுக்கும் முன்னாள் அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் பிறந்த நாளில் திமுக அரசின் சாதனைகளை விளக்கி தெரிவித்தனர்

இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் வந்திருந்த அனைவருக்கும் சிஎஸ்ஐ முறைப்படி ஜபம் செய்து வாழ்த்துக்களை பெற்றனர் இதில் மாவட்ட கழக செயலாளர் இலா பத்மநாபன் நகரக் கழகச் செயலாளர் முருகானந்தம் நகர மன்ற தலைவர் பாபு கண்ணன் உள்ளிட்ட கட்சியினர் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

பள்ளியின் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் அதைத் தொடர்ந்து சி எஸ் ஐ விடுதிக்கு உணவு வழங்கி ரியல் முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கும் மதிய உணவு வழங்கப்பட்டது 300 மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிஎஸ்ஐ சிறுவர்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் முதியோர் அறக்கட்டளை சார்ந்தவர்களுக்கு அமைச்சர்கள் உணவு வழங்கி முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *