கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூர் மாவட்டம் புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் நடைபெற்றது.


புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஜூன் – 5ல் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கரூர் மாவட்ட வனத்துறை ஏற்பாட்டின் மூலம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் விஜயன் அனைவரையும் வரவேற்றி பேசினார்.

இவ்விழாவில் செயலர் மற்றும் துணை நீதிபதி அனுராதா கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.பின்பு உதவி வன பாதுகாவலர் முருகன் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

உடன் வனசரக அலுவலர் அறிவழகன், தண்டபாணி,பசுமைத் தோழர் ஐஸ்வர்யா, NGO திருமூர்த்தி,வன அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யுவராஜா,திட்ட அலுவலர் சரவணன், மூத்த ஆசிரியர் மனோகரன், உடற்கல்வி ஆசிரியர் மகேந்திரன் மற்றும் மாவட்ட வனத்துறை பணியாளர்கள், மாணவர்கள் பலரும் ஆர்வத்தோடு சுற்றுச்சூழல் உறுதிமொழி எடுத்துக் கொண்டதோடு பேரணியிலும் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்ட் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *