தமிழக தொழில்துறை அமைச்சரை மூன்று நாட்களாக சந்திக்க முடியாமல் வருகிறோம் கிராமசபை கூட்டத்தில் உப்பள அதிபர் மனவேதனை.


தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டு தலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதற்கு ஆரம்பம் முதலே கோவளம் பண்பாடு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது

அந்த வகையில் முள்ளக்காடு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய உதவியாளர் முருகன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்துக்கு ஊராட்சி எழுத்தர் சங்கர சுப்பிரமணியன் மற்றும் மக்கள் நல பணியாளர் ஆனந்தகுமார் கணினி இயக்குனர் திவ்யா நூலகர் ரத்தின பாண்டியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர் கிராம சபை கூட்டத்தில் முள்ளக்காடு ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்

கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 பழைய குப்பை கொட்டும் இடங்களை நீக்குதல் மற்றும் கழிவுகளை தரம் பிரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது அப்போது கோவளம் பண்பாடு உப்பு உற்பத்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த பிரபாகரன். ராஜ். ஸ்ரீராம். சண்முகநாதன் உள்ளிட்ட உப்பல அதிபர்கள் கிராம சபை நடந்த கூட்டத்திற்கு வந்து கிராமத்திற்கு எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் இந்த கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது ஏன் என்று கேட்டனர் அப்போது உப்பள அதிபர் பிரபாகரன் கிராம சபை கூட்டம் நடத்தும் அதிகாரிகளிடம் பொது மக்களுக்கு குறிப்பாக கிராமத்தில் உள்ள மக்களுக்கு எந்தவிதமான தகவலும் தெரிவிக்காமல் எதன் அடிப்படையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது

அதற்கு அதிகாரிகள் இது தமிழக அரசின் இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுகாதார தொடர்பான கிராம சபை கூட்டம் என்று கூறினார்கள் அப்படி என்றால் நீங்கள் சிறப்பு கிராம சபை கூட்டம் என்று கூட்டம் கூட்டியிருக்க வேண்டும் இது கிராம சபை கூட்டம் என்று கூறி உள்ளீர்கள் அப்படி என்றால் முள்ளக்காடு பகுதியில் உப்பளத்தை கையகப்படுத்தி கப்பல் கட்டு தலம் அமைக்கப்பட வேண்டாம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார் அதற்கு அதிகாரிகள் மறுத்து விட்டனர்

மீண்டும் பிரபாகரன் பேசுகையில் சங்கத்தின் நிர்வாகிகள் மூன்று நாட்களாக சென்னையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவை சந்திப்பதற்காக காத்திருக்கின்றனர் ஆனால் இன்று வரை சந்திக்க முடியவில்லை உப்பள தொழில் அழித்து கப்பல் கட்டு தனம் அமைக்கப்பட்டால் அதனால் தொழில் வளம் முற்றிலும் பாதிக்கப்படும் ஆகையால் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் தீர்மானம் நிறைவேற்றாமல் இங்கிருந்து அதிகாரிகள் யாரும் செல்ல முடியாது என்று கூறினார்

இதனால் கிராம சபை கூட்டத்தில் திடீர் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து உப்பள அதிபர்கள் கிராம சபை கூட்டத்தில் கப்பல் கட்டு தளம் வேண்டாம் என்று தீர்மான நிறைவேற்ற கோரி கோரிக்கை மனு அளித்தனர். அப்போது மக்கள் நல பணியாளராக பணியாற்றுபவர் அந்த ஊரைச் சேர்ந்தவராக இருக்கக் கூடாது ஆனால் அந்த ஊரைச் சேர்ந்தவராக தான் இங்கு உள்ளார் என்றும் குரல் எழுப்பப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *