ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்
உலகசுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பையர் நத்தம் ஊராட்சியின் சார்பாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர், அப்துல் கலாம் ஆசாத் பொம்மிடி நடூர் காவல் நிலைய உதவி தகவல் ஆய்வாளர் குணசேகரன், ஊராட்சி மன்ற செயலாளர் ராஜீவ் காந்தி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
கிராம சபா கூட்டத்திற்கு முன்னதாக ஊராட்சி வளாகம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பசுமையை அதிகரிக்கவும் மரக்கன்றுகளை பராமரித்து வளர்க்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தினர்.
தூய்மையான கிராமம் உருவாக்க உறுதிமொழிகூட்டத்தில் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர், அப்துல் கலாம் ஆசாத் பாரத இயக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். திறந்தவெளி கழிப்பிட பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும், குப்பைகளை தரம் பிரித்து அகற்றுவதன் அவசியம் குறித்தும் விளக்கினார்.பொம்மிடி நடூர் காவல் நிலைய உதவி தகவல் ஆய்வாளர் குணசேகரன் பேசுகையில், சமூக ஒற்றுமை மற்றும் பொதுச் சொத்துக்களை பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பு முக்கியமானது என்றார். கிராம வளர்ச்சிக்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கிராம மக்களின் கோரிக்கைகள் பரிசீலனைகிராம சபா கூட்டத்தில் குடிநீர் வசதி, சாலை மேம்பாடு, தெருவிளக்குகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால் அமைத்தல், பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களின் வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் முன்வைத்தனர்.இந்த கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.