தாராபுரம் அருகே அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது தாராபுரம் அடுத்துள்ள மூலனூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் கன்னிவாடி, எடைக்கால்பாடி உட்பட6 பஞ்சாயத்துகளில் நிர்வாகிகள் கூட்டம் வெள்ளியம்பள்ளத்தில் மாவட்ட அவை தலைவர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணிசெயலாளர் பங்க் மகேஷ் குமார், மூலனூர் வடக்குஒன்றிய செயலாளர் செல்வக்குமார், மூலனூர் பேரூர் கழக செயலாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


திருப்பூர் புறநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளர் முன்னாள் எம்பி சிவசாமி பேசியதாவது
தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் 16,ஆயிரத்து500 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தொண்டர்கள் உழைப்பால் வெற்றி பெற்ற சத்தியபாமா வாக்காளர்களுக்கு நன்றி கூறாமல் தவெகவிற்கு தாவியது கண்டணத்திற்குறியது.


இங்கு தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜரத்தினமும் தவெகவிற்கு தாவினார்.

ஆனால் இவர்கள் பின்னால் ஒரு தொண்டன் கூட செல்லவில்லை. தாராபுரம் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது.
சிவி சண்முகம் தலைமையில் ஒரு பிரிவு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற முதல்லர் விஜய் திருச்சிகூட்டத்தில் அதிமுகவை தவறாக பேசியது சரியல்ல.விஜய் முதல்வர்நாற்காலியில் மூன்று கால்தான் தவெவிற்கு சொந்தம்.
ஒரு கால் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவு என்பதை மறந்துவிடகூடாது. தாராபுரம்சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில்40 ஆயிரம் வாக்கு வித்தியசாத்தில் அதிமுக வெற்றி பெறும். இவ்வாறு சிவசாமி பேசினார்.,


கூட்டத்தில்அவைத்தலைவர் தெண்டபாணி, மாவட்ட ஐ. டி விங்க் தலைவர் இளம்தமிழன், இலக்கிய அணி செயலாளர்பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *