சத்குருவின் மண் காப்போம் காவிரி கூக்குரல் இயக்கம் வாயிலாக இந்த ஆண்டு 1.2 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று காரமடை எஸ்.வி.ஜி.வி.,பள்ளியில் மரம் நடும் விழா நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி பேராசிரியர் பார்த்திபன், பள்ளி தாளாளர் பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
பேராசிரியர் பார்த்திபன் மாணவர்களிடம் பேசுகையில், “ஈசாவுடன் பள்ளி நிர்வாகம் இணைந்து மரம் நடு விழா கொண்டாடப்பட்டது. மரம் மூலமாக பஞ்ச பூதங்களை அடங்கி ஆளலாம். மரம் சார்ந்த விவசாயம் பஞ்ச பூதங்களை அடங்கி ஆளலாம். மரம் சார்ந்த விவசாயம் பஞ்ச பூதங்களை பாதுகாக்கும். சுற்று சுழலை பாதுகாக்க வீட்டில் இருந்து எரிசக்தி, தண்ணீர் பயன்பாட்டை குறைத்து பயன்படுத்த வேண்டும்,” என்றார்.
விழாவின் ஒருபகுதியாக பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், காவேரி கூக்குரல் ஒருங்கிணைப்பாளர்கள் உன்னி கிருஷ்ணன், ரவிச்சந்திரன், விவசாயிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.