கூடலூரை அடுத்த மங்குழி பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் புலி காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
குடியிருப்புகளை ஒட்டிய பகுதிகளில் புலி நடமாட்டம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அப்பகுதி மக்கள் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். வனத்துறையினர் உடனடி கண்காணிப்பை தீவிரப்படுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் தனியாக நடமாடுவதை தவிர்க்கவும். இரவு நேரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவும். புலி தென்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது.