தென்காசி ஜூன் 6 –
தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட
வல்லம் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 154 கிலோ புகையிலை குட்கா
((கணேஷ் ஹான்ஸ்( கூல்லீப்} பறிமுதல் செய்யப்பட்டது கடந்த சில நாட்களாகவே செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடுத்து குற்றாலம் காவல்துறையினர் ரகசிய தேடல்களில் ஈடுபட்டனர் இந்நிலையில் இன்று வல்லத்தில் பிரபலமான பகுதிகளில் புகையிலை பதுக்கி வைத்திருந்த பிரபல புகையிலை வியாபாரி குமார் என்பவனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்
அவரிடம் இருந்து 154 கிலோ எடையுள்ள கணேஷ் மற்றும் கூலிப் என்ற வகையைச் சார்ந்த புகையிலைப் பொருட்களை கைப்பற்றினர் . இவர் இப்பகுதியில் தொடர்ந்து விற்பனை செய்து வருவதாகவும் வந்த தகவலை எடுத்து போலீசார் கைது செய்து காவலுக்கு உட்படுத்தினர் . இதனால் வல்லம் பகுதிகளில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது
. இது குறித்து தெரிவித்த காவல்துறை அதிகாரி இன்னும் தேடுதல் வேட்டை தொடரும் என்றும் சட்ட விரோதமாக இதை போல விற்பனை செய்பவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் தெரிவித்தார்.