(ND-Noble Consultancy) என்.டி.கன்சல்டன்சி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கற்றல் & மேம்பாட்டு இயக்குநரான நெல்சன் டி’குரூஸ் கல்வி மற்றும் நிறுவன துறைகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், நிறுவன ஊழியர்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்காக கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்..
இந்நிலையில் கோவை சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள வி.வி. வாணி வித்யாலயா பள்ளி மற்றும் (ND-Noble Consultancy) என்.டி.கன்சல்டன்சி இணைந்து ஆசிரியர்களுக்கான சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது…
வாழ்க்கைத்திறன் பயிற்சியாளர், ND-Noble Consultancy நிறுவனத்தின் நிறுவனர் நெல்சன் டி’குரூஸ் தலைமையில் நடைபெற்ற பயிற்சி முகாமை வி.வி.வாணி வித்யாலாயா பள்ளியின் தாளாளர் ஆறுச்சாமி துவக்கி வைத்தார்..
ஒரு நாள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் ஆசிரியர்களுக்கான அனுபவ அடிப்படையிலான கற்றல், வெளிப்புற செயல்பாடுகள், சாகசப் பயிற்சிகள் மற்றும் ஊடாடும் செயல்முறைகள் மூலம் தலைமைத்துவம், தகவல் தொடர்புத் திறன், குழு ஒருங்கிணைப்பு, பிரச்சினை தீர்க்கும் திறன் மற்றும் தனிமனித மேம்பாடு போன்ற அம்சங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டன…
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எழுத்தாளர் கீதா நாயர் எழுதிய புத்தகம் வெளியீடு செய்யப்பட்டது..
தொடர்ந்து எழுத்தாளர் கீதா நாயர் ஆசிரயர்களிடையே கலந்துரையாடினார்..
இந்த பயிற்சி முகாம் மூலம் ஆசிரியர்கள் தங்களது தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதுடன், தனிப்பட்ட வளர்ச்சி, மனநலம் மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலையை வலுப்படுத்தும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.
எதிர்கால தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளியின் தாளாளர் ஆறுச்சாமி தெரிவித்தார்..
முகாமில் பள்ளி முதல்வர்,துணை முதல்வர்,ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்…