கோவையில் மழலைகளின் அசாத்திய கணிதத் திறன் உலக சாதனை
கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள அகரம் கிட்ஸ் மாண்ட்டிஸரி அகாடமியில் கணிதப்பயிற்சி பெற்றுவரும் மாணவர்கள் கணிதத்தில் புதிய உலக சாதனை படைத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளனர்.அகரம் கிட்ஸ் மாண்ட்டிஸரி பள்ளியில் நடைபெற்ற இந்தச் சாதனை முயற்சியில் 6 முதல் வயதிற்குட்பட்ட கவிநயா, நேஹிதா, தூயா ஸ்ரீ, ப்ரணவி, ப்ரஹிதா, லக்ஷனா,லக்ஷனா ஸ்ரீ, அத்யாக்ஷ, மெல்வின் அகில், லோகித் ஆகிய 10 குழந்தைகள் பங்கேற்றனர்
அவர்கள் வெறும் 12 நிமிடங்களில் 1200 பெருக்கல் கணக்குகளை மின்னல் வேகத்தில் துல்லியமாக முடித்து சாதனை படைத்தனர்.
குறித்த நேரத்தில் முடித்த அவர்களின் திறமையைக் கண்டபோது அங்கே கூடியிருந்த அனைவரும் தொடர்ந்து கரவொலி எழுப்பினர்.இந்தத் திறமையை ஆய்வு செய்த சோழன் உலக சாதனை புத்தகத்தின் பிரதிநிதிகள் மாணவர்களின் வேகம் மற்றும் துல்லியத்தை உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக உலக சாதனையாக அங்கீகரித்தனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.இந்நிகழ்வில் பள்ளியின் நிறுவனர் பொற்கொடி செல்வராஜ், தாளாளர் செல்வராஜ், செயலாளர் அகரமுதல்வன், தலைமை அலுவலர்கள் நித்யா, கல்பனா, பெற்றோர்கள், பொதுமக்கள் ,ஆசிரியைகள் கனகா, கார்த்திகா, சண்முகப்ரியா, சுமதி, ராணி,பிந்து மற்றும் சோழன் உலக சாதனை புத்தகத்தின் கோவை மாவட்ட தலைவர் பாலமுரளி கிருஷ்ணன் ,மாவட்ட செயலாளர் திலகவதி,முதன்மை செயற்குழு உறுப்பினர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இந்த இளம் மாணவர்களின் சாதனையைப் பாராட்டினர்.