திருவொற்றியூர், ஜூன். 8

அத்தியாவசிய வேலைகளுக்காக வெளியே செல்லும் பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்கு, நீர்மோர் வழங்கிய, தீயணைப்பு துறையினர் தீயணைப்பு துறையினர் வேலை என்பது பொதுவாக, கொழுந்து விட்டு எரியும் நெருப்பை, தண்ணீர் பாய்ச்சி அணைப்பது. ஆனால், வெயிலின் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க, தீயணைப்பு துறையினர் ஒரு நூதன முறையை கையாண்டுள்ளனர்.

வாங்க, தெரிந்து கொள்வோம் என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் பொதுமக்களை தீயணைப்பு நிலையத்திற்கு வரவைத்து அவர்களுக்கு தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இதனைத் தொடர்ந்து திருவெற்றியூர் தீயணைப்பு துறையினர் மற்றும் எண்ணூர் தீயணைப்பு துறையினர் நூதன விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.மேலும் அது தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி, நீர்மோர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியதில், பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed